749
நெஸ்லே மைலோ அனுசரணையில் 49 ஆவது அகில இலங்கை பாடசாலை நீர் விளையாட்டு சம்பியன்சிப் போட்டி நாளை (09) தொடக்கம் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி வரை கொழும்பு, சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை பாடசாலை நீர் விளையாட்டு சம்மேளனத்தினால் நடத்தப்படும் இந்தப் போட்டிக்கு நெஸ்ட்லே மைலோ தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு சம அளவான வாய்ப்பை வழங்கும் இந்த போட்டியில் நாடு முழுவதிலும் உள்ள 272 பாடசாலைகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான மாணவிகள் மற்றும் 3000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.