Home » பிரித்தானிய நாடாளுமன்றின் குழந்தை; 22 வயது இளைஞனின் சாதனை

பிரித்தானிய நாடாளுமன்றின் குழந்தை; 22 வயது இளைஞனின் சாதனை

- தனது வெற்றியை "அரசியல் பூகம்பம்" என்று வர்ணித்த சாம்

by Prashahini
July 8, 2024 4:19 pm 0 comment

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் (uk) பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் (Sam Carling) “நாடாளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்படுவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான சாம், சுமார் 22 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய ஷைலேஷ் வராவை தோற்கடித்தார்.

தனது வெற்றியை “அரசியல் பூகம்பம்” என்று வர்ணித்த சாம், இன்னும் அதிகமான இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT