மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா (MEDICAL EXCELLENCE AWARDS) எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.
பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களை ஊக்குவிக்கும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மருத்துவத் துறையில் தன்னலம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்களுக்கு எட்டாவது ஆண்டாக மருத்துவமன விருது விழா நடத்த உள்ளது
இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மருத்துவர்கள் கலந்து கொண்டு விருது பெறவுள்ளனர்.
இரவு பகல் பாராமல் சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருத்துவ பல்கலைக்கழகங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உதவி மருத்துவர்கள் போன்றவர்களுக்கு இதில் விருது வழங்கப்பட உள்ளது. இதில் விருது பெற ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, மருத்துவ அறிஞர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் [email protected] மற்றும் +60166167708 என்ற whatsapp-லும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என நிகழ்ச்சியின் ஏற்பட்டாளரும் உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.