Friday, October 4, 2024
Home » காதலனுடன் சென்று காணாமற்போன யுவதி; கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

காதலனுடன் சென்று காணாமற்போன யுவதி; கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

by Prashahini
July 5, 2024 3:39 pm 0 comment

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 25 வயதான நடேஷ்குமார் வினோதினி என்ற  பெண்ணின் சடலமும் அவரது கைப்பையும் இன்று (5) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

காதலனுடன் வீட்டிலிருந்து சென்ற நிலையில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நடேஸ்குமார் வினோதினி தொடர்பான முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரணவிசாரணை அதிகாரி உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று (05) தோண்டியபோதே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண்ணின் கைப்பை மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவற்றையும் குறித்த கிணற்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

பின்னர் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனுடன் சென்ற 25 வயது இளம் யுவதியை காணவில்லை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x