Tuesday, October 8, 2024
Home » அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள்; மும்மாடிக் கட்டடம் முற்றாக சேதம்

அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள்; மும்மாடிக் கட்டடம் முற்றாக சேதம்

- பல கோடி ரூபா பெறுமதியான உடைமைகள் சேதம்

by Rizwan Segu Mohideen
July 5, 2024 11:44 am 0 comment

– மாத்தளை – கண்டி A9 வீதி மீண்டும் திறப்பு

அக்குறணை நகரத்திலுள்ள பிரபல மும்மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த கட்டடம் தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.

இன்று (05) வௌ்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக அக்குறணை A9 வீதியில் அமைந்துள்ள மேற்படி கட்டடம் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் கண்டி மாநகர சபை தீ அணைப்புப் பிரிவினரும் பொலிசாரும், பிரதேச மக்களும் இணைந்து அருகில் உள்ள கட்டடங்களுக்கு தீ பரவுவதை கட்டுப்படுத்தினர்.

வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் கண்டி – மாத்தனை பிரதான வீதியில் அக்குறணை பிரதேச வீதி மூடப்பட்டிருந்தது. கண்டி- மாத்தளை வீதி வழியாகப் பயணிக்கும் தூர இடங்களுக்கான பஸ்கள் மற்றும் வாகனங்கள் வத்துகாமம் வழியாக அனுப்பட்டட்டன.

அக்குறணை 6ஆம் மைல்கல் மற்றும் 7ஆம் மைல்கல் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முன்னாள் பெயார்லைன் ஆடைத் தொழிற்சாலை அமைந்திருந்த இடத்தில் உள்ள உணவகம் மற்றும் வெதுப்பகமே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கு சுமார் 50 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தாகவும், இதனால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டதாவும் பொலிசார் தெரிவித்தனர்.

தீ ஏற்படக் காரணம் என்னவென இன்னும் அறியப்படாத நிலையில், அளவத்துகொடைப் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அக்குறணை குறூப் நிருபர்)

அக்குறணை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாரிய தீ

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x