455
கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று (04) இரவு 9.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொலன்னாவை, கடுவல நகரசபைக்குட்பட்ட பகுதிகள், முல்லேரியா, கொட்டிகாவத்தை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (04) இரவு 9.00 மணி முதல் நாளை (05) பிற்பகல் 3.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு பணி காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.