Saturday, July 20, 2024
Home » வொஷிங்டனில் அமெரிக்க – இந்திய மூலோபாய கூட்டாண்மை மாநாடு

வொஷிங்டனில் அமெரிக்க – இந்திய மூலோபாய கூட்டாண்மை மாநாடு

by Rizwan Segu Mohideen
June 25, 2024 3:17 pm 0 comment

அமெரிக்க – இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் வருடாந்த தலைமைத்துவ உச்சி மாநாடு வொஷிங்டனில் நடைபெற்றுள்ளது.

முக்கியமானதும் வளர்ந்து வருவதுமான தொழில்நுட்ப முயற்சிகள் உட்பட இருபக்க வர்த்தக உறவை மேம்படுத்தல், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தல், இந்தோ-பசுபிக் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க – இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் லோக்சபா தேர்தலுக்கு பின்னரான முதலாவது அமெரிக்க – இந்திய உயர்மட்ட உரையாடலாக இம்மாநாடு அமைந்திருந்தது.

அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான், முக்கியமானதும் வளர்ந்து வருவதுமான தொழில்நுட்பங்கள் குறித்த உரையாடலுக்காக அண்மையில் புதுடில்லியில் விஜயம் செய்திருந்தார். அதன் பின்னர் இடம்பெறக்கூடிய உயர்மட்ட உச்சிமாநாடாக இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

வொஷிங்டனில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர்கள், வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கலாக அமெரிக்க, இந்திய கொள்கை வகுப்பாளர்கள், முக்கிய வணிகத் தலைவர்கள், உயர் பதவிகள் வகிக்கும் அரசியல் பிரதிநிதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் என இரு நாடுகளதும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT