Saturday, July 20, 2024
Home » மின்கல தொழிற்சாலையில் தீ: 20க்கு மேற்பட்டோர் பலி

மின்கல தொழிற்சாலையில் தீ: 20க்கு மேற்பட்டோர் பலி

by Gayan Abeykoon
June 25, 2024 10:39 am 0 comment

தென் கொரியாவின் லித்தியம் மின்கல தொழிற்சாலையில் நேற்று (24) ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து சுமார் 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருவதாக தீயணைப்பு வீரர்கள் கூறியிருந்தனர்.

தலைநகர் சோலின் தெற்காக 45 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ஹிவாசியோங் நகரில் உள்ள தொழிற்சாலையிலேயே இந்தத் தீ ஏற்பட்டுள்ளது.

நூறுக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டாவது மாடியில் வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியதாக தீயணைப்பு வீரரான கிம் ஜின் யங் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதில் 78 பேர் பாதுகாப்பாக அப்புறுப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் சிலரை தொடர்ந்து காணவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணி அளவில் ஏற்பட்ட தீயை மாலை 3 மணி அளவில் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சார வாகனங்கள் தொடக்கம் மடிக்கணினிகள் வரை பல்வேறு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் மின்கலன்களை உற்பத்தி செய்யும் முன்னணி நாடாக தென் கொரியா உள்ளது.

லித்தியம் தீ தண்ணீருடன் வேகமாக பரவக்கூடியது என்பதால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பாளர்கள் உலர்ந்த மணலை பயன்படுத்தினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT