Saturday, July 20, 2024
Home » விளையாட்டு வீரர்கள் அமெரிக்க இரவு விடுதியில் நேரத்தை கழித்தார்களா?

விளையாட்டு வீரர்கள் அமெரிக்க இரவு விடுதியில் நேரத்தை கழித்தார்களா?

நிரூபித்தால் பதவி விலகவும் தயார்

by Gayan Abeykoon
June 25, 2024 10:06 am 0 comment

T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள்,  அமெரிக்காவில் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக கூறப்படுவதை முடியுமானால் எவரேனும் நிரூபிக்குமாறு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ  சவால் விடுத்துள்ளார்.

இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்காவில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியே சென்றுவிட்டு மறுநாள் காலையில்  பயிற்சிக்கு சென்றதாக, எமது முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

சுற்றுப்பயணத்தின் போது எமது வீரர்கள் அமெரிக்காவில் நைட் கிளப்பில் அல்லது பார்ட்டிகளில் பங்குபற்றினார்கள் என்பதை,  எவராவது நிரூபித்தால்  பதவி விலகவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது நாடு, எமது நாட்டு வீரர்கள் என்ற வகையில் நாம் அவர்களுக்குஉதவ வேண்டும்.  கிரிக்கெட் அன்றி ‘ஜில் போலையை’கூட விளையாடாதவர்கள் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு குறிப்பிடுவது முறையற்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT