Monday, July 22, 2024
Home » பழங்களின் உபயோகம் ஏற்றுமதிகள் அதிகரிப்பு

பழங்களின் உபயோகம் ஏற்றுமதிகள் அதிகரிப்பு

- உற்பத்தியை மேலும் அதிகரிக்க விசேட திட்டங்கள்

by Gayan Abeykoon
June 25, 2024 1:05 pm 0 comment

நாட்டில் இதற்கு முன்னரை விட  பழ வகைகளின் உபயோகம் அதிகரித்துள்ளதாகவும் அந்த வகையில், கடந்த வருடத்தில் 12.8 மில்லியன் மெற்றிக் தொன் பழங்கள் உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பழங்கள்  ஏற்றுமதி,கடந்த வருடத்தில் வெகுவாக அதிகரித்து காணப்பட்டதுடன், கடந்த வருடத்தில் மாத்திரம் 38, 201 மெற்றிக் தொன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. பழங்களின் உபயோகம் மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருவதால், பழங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2027 ஆம் ஆண்டாகும் போது வாழைப்பழம்,மாம்பழம்,அன்னாசி, பப்பாசி, கொடித்தோடை ஆகிய பழங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT