Saturday, July 20, 2024
Home » இலங்கை இளைஞர்களின் உயர்கல்விக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் உதவ தயார்

இலங்கை இளைஞர்களின் உயர்கல்விக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் உதவ தயார்

by Gayan Abeykoon
June 25, 2024 10:34 am 0 comment

இலங்கை இளைஞர்களின் உயர் கல்வியை தொடர்வதற்கு  பாகிஸ்தான் முழுமையாக உதவும் என்று இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ் தெரிவித்தார்.

மதுரங்குளி, முஸ்லிம் ஹேண்ட்ஸ்-ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.எம். மிஹ்லார் தலைமையில் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய உயர் ஸ்தானிகர், பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு, நாடளாவிய ரீதியில் தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது.

அல்லாமா இக்பால் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 480 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாகிஸ்தானின் முன்னணி  பல்கலைக்கழகங்களில் பட்டதாரி, முதுகலை மற்றும் கலாநிதி பட்டங்களைக் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இந்நாட்டு இளைஞர்களின் உயர்கல்வி கனவைத் தொடர உதவுவதற்கு பாகிஸ்தான் முழுமையாக உதவும் என்று கூறியுள்ளார்.

இவ்வைபவத்தின் போது புத்தளம், மதுரங்குளி பிரதேசங்களைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்த உயர் ஸ்தானிகர், பாடசாலைப் பயன்பாட்டுக்கென கணினிகளையும் கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்கி வைத்தார். அத்தோடு பாடசாலையின் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்விலும் உயர் ஸ்தானிகர் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT