Saturday, July 20, 2024
Home » பூட்டானில் 570 MW பசுமை நீர் மின்னுற்பத்தி நிலைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கௌதம் அதானி கைச்சாத்து

பூட்டானில் 570 MW பசுமை நீர் மின்னுற்பத்தி நிலைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கௌதம் அதானி கைச்சாத்து

by Rizwan Segu Mohideen
June 25, 2024 3:29 pm 0 comment

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, பூட்டான் பிரதமர் செரிங் டெப்கேயை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சுகா மாகாணத்தில் 570 மெகா வோர்ட் நீர் மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்நாட்டின் துருக் கிரீன் பவர் கூட்டுத்தாபனத்துடன்( Druk Green Power Corporation) அவர் கையெழுத்திட்டார்.

மேலும், மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கின் தொலைநோக்கு பார்வையின் கீழ் உள்கட்டமைப்பை மேம்படுத்த பூட்டானின் முயற்சிகளை அவர் பாராட்டினார். பூட்டானில் நீர்மின் மற்றும் பிற திட்டங்களில் ஒத்துழைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

தனது எக்‌ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள கௌதம் அதானி, ” பூட்டான் பிரதமர் டெசோ செரிங் டொப்கே( Dasho Tshering Tobgay)உடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. சுகா மாகாணத்தில் 570 மெகாவாட் பசுமை நீர் ஆலை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. பூட்டான் பரந்த அளவிலான உள்கட்டமைப்பு முயற்சிகளைப் பின்பற்றி வருகிறது. பூட்டானில் நீர் மற்றும் பிற உள்கட்டமைப்புகளில் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்க்கிறோம்.”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கையும் அதானி சந்தித்தார்.மேலும் பூட்டானுக்கான மன்னரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கெலெபு மைண்ட்புல்னஸ் சிட்டிக்கான சுற்றுச்சூழல் நட்புத் திட்டம் ஆகியவை கவரக் கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அவர் வரவேற்றார்.

“பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். பூட்டானுக்கான அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் பாரிய கணினி மையங்கள் மற்றும் தரவு வசதிகள் உட்பட கெலெபு மைண்ட்புல்னஸ் சிட்டிக்கான இலட்சிய சுற்றுச்சூழல் நட்பு திட்டம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாக அதானி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கார்பன் பூச்சிய உமிழ்வு தேசத்திற்கான பசுமை ஆற்றல் முகாமைத்துவத்திலும், இந்த உருமாறும் முன்முயற்சிகளில் ஒத்துழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT