Saturday, July 20, 2024
Home » ஏழு நாட்களில் 11,567 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊ டாக டிஜிட்டல் வங்கிப் புரட்சி செய்துள்ள ஜே என்ட் கே வங்கி

ஏழு நாட்களில் 11,567 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊ டாக டிஜிட்டல் வங்கிப் புரட்சி செய்துள்ள ஜே என்ட் கே வங்கி

by Rizwan Segu Mohideen
June 25, 2024 7:35 pm 0 comment

ஜே என்ட் கே வங்கி, ஈத்-உல்- அல்ஹா பண்டிகைக்கு முன்னதாக கடந்த ஒரு வாரத்தில் தனது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் 11,567 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்து, பிராந்தியத்தில் டிஜிட்டல் வங்கிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியின் பிரபலமான மொபைல் பயன்பாடான எம் பே டிலைட் (mPay Delight) 5,300 கோடி ரூபாய் பரிவர்த்தனைகளை எளிதாக்கியது – இது மொத்த டிஜிட்டல் பரிமாற்றத்தில் கிட்டத்தட்ட 50% ஆகும். பயன்பாட்டின் பயனர் நட்புப் போக்கு மற்றும் தடையற்ற செயல்திறன் ஆகியவை பரபரப்பான பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை மகிழ்வித்தது.

ஜே என்ட் கே வங்கியின் ஒருங்கிணைந்த கட்டண (UPI )பரிவர்த்தனைகளும் கடந்த ஏழு நாட்களில் அதிகபட்சமான ரூ.3,200 கோடியை எட்டியது. குறிப்பிடத்தக்க வகையில், எம் பே டிலைட் தினசரி பரிவர்த்தனைகள் 1,000 கோடியைத் தாண்டியது.இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகப் பதிவான அதிக பட்ச பரிவர்த்தனையாகும். இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் ஈத்-உல்-பித்ருக்கு முன்பு இந்த மைல்கல் எட்டப்பட்டது.

வங்கியின் விரிவான வணிக வலையமைப்பானது தொலைதூரப் பகுதிகளில் வங்கிச் சேவைகளை வழங்கி, தடையில்லா வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்யும் போது, ​​1,000 கோடி பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது.

ஜே என்ட் கே மற்றும் லடாக்கில் உள்ள மிகப்பெரிய இயற்பியல் வலையமைப்புடன், வங்கி அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. QR குறியீடுகளுடன் எம் பே டிலைடின் அண்மைய ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது.

துணி வியாபாரியான முகமது அகிப் கருத்துத் தெரிவிக்கையில், வங்கியின் டிஜிட்டல் வலையமைப்புகள் பண்டிகை காலங்களில் வணிகங்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன என்றார். “டிஜிட்டல் பேங்கிங் தடையின்றி இருக்கும் போது, ​​அது உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதேபோன்று பலரும் கருத்துத் தெரிவித்ததோடு அக்ஸா நம்கீனின் குறிப்பிடுகையில், வங்கி முறைமை இப்போது வரலாறாகியுள்ளது கூறினார், கடைசியாக ஒரு வாடிக்கையாளர் எம்பேயினால் சிக்கலை எதிர்கொண்டதை தன்னால் நினைவுபடுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜே என்ட் கே வங்கியின் பிரதிப் பணிப்பாளர் முஹமது முசாபர் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் பல்தேவ் பிரகாஷ் தலைமையில் வங்கி டிஜிட்டல் மீது கவனம் செலுத்தியதே வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். “தொழில்நுட்பத்தில் எங்களது தொடர்ச்சியான முதலீடு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக உள்ளது” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT