Tuesday, October 8, 2024
Home » கலைக்கமலின் ” கீத்ராத் 61 “
ஜனரஞ்சகப் பாடகர் கலைஞர்

கலைக்கமலின் ” கீத்ராத் 61 “

by Gayan Abeykoon
June 25, 2024 8:20 am 0 comment

தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரணையில் ஜனரஞ்சகப் பாடகர் கலைஞர் கலைக்கமலின் “கீத்ராத் 61” எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி மாலை 7 மணிக்கு கொழும்பு 7 ஜே.ஆர். ஜெயவர்தன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பிரபல இசைக் கலைஞர்கள் பஸால் ஜின்னாஹ், அயாஸ் சவாஹிர் , ஹாரிஸ் மாஸ்டர், சுப்பர் டியூனர்ஸ் பெளமி, அஸார் கெளஸ் இசையில் கலைக்கமலுடன் சிறப்புப் பாடகராக சிங்கப்பூர் பிரபல கலைஞர், சுங்கத் திணைக்கள அதிகாரி ஹாஜி ஃபரிஹூல்லாஹ், பிரபல பாடகி மொறின் ஜெனற் இணைந்துபாடவுள்ளனர். தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தலைமையில் பிரபல தொழிலதிபர், சமூகசேவையாளர் ALLIED TRADING INTERNATIONAL (PVT ) LTD இப்திகார் அஹ்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு பிரதான அனுசரணை வழங்கும் Level 09, Orion Towers, 752, Dr .Danister De Silva Mawatha, Baseline Road, Colombo 09 RANAR MIGRATION CENTER இயக்குநர் முஹம்மத் நஸீர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

இறை ஞானக் கவிமணி ரமீஸ்ஹாஜி, பிரபல சமூகசேவகி ஸீனியா விஷேட அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல வானொலி அறிவிப்பாளர் கவிதாயினி கலையழகி வரதராணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். இசையபிமானிகள் இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x