Monday, July 22, 2024
Home » இஸ்ரேல்–லெபனானில் தொடர்ந்தும் மோதல்

இஸ்ரேல்–லெபனானில் தொடர்ந்தும் மோதல்

by mahesh
June 22, 2024 2:02 pm 0 comment

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா எல்லையில் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

லெபனான் மீதான தாக்குதல் ஒன்றுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக இஸ்ரேல் அண்மையில் அறிவித்த நிலையில் பதிலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு போர் எச்சரிக்கையை விடுத்த சூழலில் முழு அளவில் போர் மூழும் அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு இஸ்ரேல் மீது பல டஜன் ரொக்கெட் குண்டுகளை வீசியதாக நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா குறிப்பிட்டது. தெற்கு லெபனானில் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா போராளி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறிய நிலையில் அதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் நிலைகள் மீது மேலும் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது.

இந்நிலையில் போர் விமானங்கள் இரு ஆயுத களஞ்சியங்களை தாக்கியதாகவும் ஹிஸ்புல்லாவின் பல தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியதோடு தெற்கு லெபனானில் பல இடங்களிலும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி அச்சுறுத்தல்களை நீக்கியதாகவும் அது குறிப்பிட்டது. லெபனானின் தெற்கில் நேற்றுக் காலை புதிய வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக லெபனான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான பரஸ்பரம் தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையிலேயே அது முழு அளவில் போராக வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகாரித்துள்ளது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT