Saturday, July 20, 2024
Home » நாட்டின் ஒரு சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாட்டின் ஒரு சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

by Rizwan Segu Mohideen
June 22, 2024 8:38 am 0 comment

– ஒரு சில இடங்களில் பலத்த காற்று

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகின்றது.

மாத்தளை, அநுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT