Saturday, July 13, 2024
Home » கனடிய பயங்கரவாத பட்டியலில் ஈரானிய புரட்சிப் படை சேர்ப்பு

கனடிய பயங்கரவாத பட்டியலில் ஈரானிய புரட்சிப் படை சேர்ப்பு

by mahesh
June 21, 2024 12:19 pm 0 comment

ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையை கனடா பயங்கரவாத அமைப்பு ஒன்றாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் ஈரானிய உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக செய்து வந்த அழுத்தத்தை அடுத்தே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பை கடந்த புதன்கிழமை (19) வெளியிட்ட கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிகா லேபிலன்க், ‘சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முக்கிய அம்சமாக இது உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆயிரக்கணக்கான ஈரானிய அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைவது தடை செய்யப்படுகிறது.

இதனைக் கண்டித்திருக்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், ‘விவேகமற்ற மற்றும் வழக்கத்திற்கு மாறான’ செயற்பாடு என்று ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஈரானின் புரட்சிக் காவல் படை ஈரானில் பிரதான இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக இருப்பதோடு அது ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனெயுடன் நெருக்கம் கொண்டுள்ளது.

சொந்தமான தரைப்படைகள், கடற்படை மற்றும் விமானப் படையை கொண்ட ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையில் 190,000க்கும் அதிகமான படையினர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்கா 2019 ஆம் ஆண்டிலேயே இஸ்லாமிய புரட்சிக் காவல் படையை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்ததோடு பிரிட்டன் இவ்வாறான ஒரு நடவடிக்கை பற்றி அண்மைக் காலமாகக் கூறி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT