Saturday, July 13, 2024
Home » ஹமாஸை ஒழிக்க முடியாது

ஹமாஸை ஒழிக்க முடியாது

by mahesh
June 21, 2024 2:06 pm 0 comment

ஹமாஸ் அமைப்பை ஒழிக்க முடியாது என்று இஸ்ரேல் மூத்த இராணுவப் பேச்சாளர் கருத்து வெளியிட்டதை அடுத்து அதற்கு பதிலளித்த இஸ்ரேலிய அரசு ஹமாஸை ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக போரிட்டு வரும் இஸ்ரேல் அங்கு பெரும் அழிவுகளை செய்தபோதும், காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸை அகற்றுவதில் தோல்வி கண்டு வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் ‘சென்னல் 13’ தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகரி கூறியாவது,

‘ஹமாஸ் அமைப்பை அழிப்பது, மக்களின் கண்களில் மண் வீசுவதற்கு சமம். இறுதியில் சரியான மாற்று வழியை வழங்காத பட்சத்தில், ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம். ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதனை ஒழிக்கவே முடியாது’ என்றார்.

இந்தக் கருத்து இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் உடன் பதிலளித்திருந்தது.

ஹமாஸை ஒழிப்பது தான் இந்தப் போரின் மிக முக்கிய குறிக்கோள் என்றும் அதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT