Saturday, July 13, 2024
Home » வலைப்பந்தாட்ட சம்பியனானது அன்னமலை மகா வித்தியாலயம்

வலைப்பந்தாட்ட சம்பியனானது அன்னமலை மகா வித்தியாலயம்

by mahesh
June 21, 2024 9:04 am 0 comment

சம்மாந்துறை வலய வலைப்பந்தாட்ட சாம்பியனாக நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அணி வெற்றியீட்டியது.

சம்மாந்துறை வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டி நேற்று முன்தினம் (19) சம்மாந்துறை அல் மல்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது .

இதில் 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் வீரமுனை ராமகிருஷ்ணா மகா வித்தியாலயம், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், சம்மாந்துறை அல் மல்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலை அணிகளைத் தோற்கடித்து நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அணி சாம்பியனாக தெரிவானது.

சம்மாந்துறை வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நுஸ்ரத் நிலோபரா முன்னிலையில் இந்தப் போட்டி நடைபெற்றது.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT