Saturday, July 13, 2024
Home » இ.போக்குவரத்து சபையில் சேவை யாப்பின் அடிப்படையில் பதவி உயர்வுகள்

இ.போக்குவரத்து சபையில் சேவை யாப்பின் அடிப்படையில் பதவி உயர்வுகள்

by mahesh
June 21, 2024 11:30 am 0 comment

இலங்கை போக்குவரத்து சபையில் பதவிகளை உருவாக்குவது தொடர்பில் வரலாற்றில் முதல் தடவையாக, சேவை யாப்பு உருவாக்கப்பட்டு , நிலவிய சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பதவிகள் தொடர்பில்,இனி சிக்கல்கள் ஏற்படாது. தகைமைகளுக்கு இணங்க நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை சேவை யாப்பின் மூலம் வழங்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எம்பி கபீர் ஹாசிம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;

யாப்பு ஒன்று இல்லாத நிலையிலேயே இலங்கை போக்குவரத்து சபை செயற்பட்டு வந்துள்ளது.அது விந்தையானது. எனினும் உண்மை இதுவே.

தேர்தல் ஒன்று நடைபெற்று முடிந்ததும் முதலாவது தாக்குதல் இலங்கை போக்குவரத்து சபை மீதே மேற்கொள்ளப்படும்.

வெற்றி பெற்றவர்கள் பதவியில் அமர்வர்.

பதவி வழங்களில் பதவி உயர்வு உள்ளிட்ட எந்த ஒன்றுக்கும் முறையான திட்டமொன்று கிடையாது. அதனால் தகைமை உள்ளவர்கள் பதவிகளுக்கு நியமிக்கப்பட மாட்டார்கள். தொழிற்சங்கங்களே இங்கு செயல்படும். வேலை நிறுத்தப்போராட்டம் இல்லாமல் இலங்கை போக்குவரத்து சபையின் கோரிக்கைகளை சாத்தியமாக்குவதால், மிக மோசமான பாதிப்புகளை எனக்கு எதிர்நோக்க நேர்ந்தது.

இதற்காகவே நான் சேவை யாப்பு ஒன்றை தயாரித்தேன்.அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவுக் குழு காணப்படுகிறது. அதில் நான் அங்கம் வகிக்கிறேன். பிரச்சினையை நான் சபைக்கு கொண்டு வந்தேன். ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT