Saturday, July 13, 2024
Home » வேதாந்தியின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று

வேதாந்தியின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று

by mahesh
June 21, 2024 1:17 pm 0 comment

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஊடக பிரதியமைச்சருமான எம்.எச். ஷேகு இஸ்ஸதீனின் (வேதாந்தி) சிறு கதைகள் நூல் ​ெவளியீட்டு விழா இன்று (21) வெள்ளிக்கிழமை இடம்பெறுகிறது.

அக்கரைப்பற்று கடற்கரை வளாகத்தில் இவ்வெளிட்டு விழா நடைபெறும். இந்நிகழ்வில், கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. சிறப்பு அதிதிகளாக பிராந்தியத்தின் இலக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர். அரசியல், சமூகவியல், ஆத்மீகம் மற்றும் இலக்கிய துறைகளை உள்ளடக்கிய பல சிறுகதைகளை இந்நூல் சுமந்து வருகிறது.

இவ்விழா, சர்ஜூன் ஜமால்தீன் தலைமையில் இடம்பெறுகிறது. நூல் விமர்சன உரையை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ்அப்துல்லாஹ், நூலுரையை சட்டத்தரணி ஏ.எம்.தாஜ் மற்றும் நோக்குரையை பன்னூலாசிரியர் ரபியுதீன் ஜமாலி ஆகியோரும் நிகழ்த்துகின்றனர்.

(ஏ.ஜீ.எம்.தௌபீக்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT