Saturday, July 20, 2024
Home » சூழுல்நேய கழிவு மீள்சுழற்சியில் சமகால தொழில்நுட்பங்கள்

சூழுல்நேய கழிவு மீள்சுழற்சியில் சமகால தொழில்நுட்பங்கள்

by mahesh
June 21, 2024 11:54 am 0 comment

நாடுகளின் வருமானம் அதிகரிக்கும் போது உலகளவில் கழிவுகளின் பெருக்கமும் அதிகரிக்கும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சனத்தொகைப் பெருக்கம் மற்றும் நகரத்துறை சார்ந்து மக்களின் இடம்பெயர்வு என்பன கழிவுகளின் அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றன.

மேலும் மக்களிடம் காணப்படுகின்ற கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவின்மையினால் கழிவுகள் இடத்திற்கிடம் பரவலாகக் குவிந்து காணப்படுகின்றன. உலகளவில் சராசரியாக 2.01 பில்லியன் தொன் திண்மக்கழிவுகள் காணப்படுவதாகவும் 2025ஆம் ஆண்டளவில் 2.2 பில்லியன் தொன் திண்மக்கழிவுகள் அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கழிவு முகாமைத்துவமின்மையால் உடல் ஆராக்கியம் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாகின்றது. தற்காலத்தில் கழிவு முகாமைத்துவம் என்பது நாடுகளினால் பின்பற்றப்படுகின்ற வினைத்திறனான செயற்பாடாகக் காணப்படுகின்றது. கழிவுகளைச் சேகரித்து அவற்றைத் தரம் பிரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் அல்லது அழிக்கும் செயற்பாடு கழிவு முகாமைத்துவம் எனப்படும். கழிவுகளை பிரதானமாக திண்மக்கழிவுகள், திரவக்கழிவுகள் எனப் பாகுபடுத்தலாம். திண்மக் கழிவுகளின் வகையினுள் விவசாயக் கழிவுகள், நகரசபைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுத்துறைக் கழிவுகள் மற்றும் விசேட கழிவுகள் என்பன உள்ளடங்கும். இவ்விசேட கழிவுகளில் E-waste, Medical waste, Plastic waste and Construction waste என்பன உள்ளடங்கும்.

உலகளவில் 10 வீதத்தை விடக் குறைந்தளவான கழிவு மீள்சுழற்சியினை மேற்கொள்ளும் நாடுகளாக தென்னாசியா, கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்க நாடுகள் காணப்படுகின்றன.

மாறாக ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, அமெரிக்கா, கனடா, பிரேசில், துருக்கி, சீனா போன்ற உயர்வருமானமுடைய நாடுகளில் கழிவு முகாமைத்துவம் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

உலகளவில் திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை இந்நாடுகள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன.

19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியில் உலகமயமாக்கலைத் தொடர்ந்து ஜப்பான் அதிகரித்த கழிவுகளினால் பாரிய சூழல் பிரச்சினைகளை எதிர்கொண்டது. 20ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கைத்தொழில் மயமாக்கல் மற்றும் அதிகரித்த பொருளாதார வளர்ச்சி என்பன கழிவுகளின் அளவை பாரியளவில் அதிகரித்தன. கழிவு முகாமைத்துவத்தினை மேற்கொள்வது தொடர்பான முதலாவது சட்டம் 1900 இல் ‘Waste Cleaning Act’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

20ஆம் நூற்றாண்டுகளில் அதிகரித்த கழிவுகளை முகாமை செய்வதற்கு 3R (Reduce, Reuse, Recycle) மையப்படுத்திய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பான் நாட்டில் கடைப்பிடிக்கப்படுகின்ற வேறுபட்ட கழிவு முகாமைத்துவ கொள்கைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

Technology Efficient Waste Transport – கழிவுகளை சேகரித்து உரிய இடத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவை குறைப்பதற்காக விசேட திட்டம் ஜப்பானில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விசேட வகை வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு அவற்றினூடாக ஒரே தடவையில் அதிகளவுகழிவுகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறான முறையில் கழிவுகளை முகாமை செய்வதுடன் சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்த முடியும். அபிவிருத்தியடைந்த நாடுகள் இத்தகைய நவீன தொழினுட்பங்களைப் பயன்படுத்தி கழிவு முகாமைத்துவ நடவடிக்கையில் முன்னேற்றமடையும் அதேவேளை, அபிவிருத்தியடைந்து வரும் குறைந்த வருமானமுடைய நாடுகள் கழிவு முகாமைத்துவத்தினை சீராக பின்பற்றாமையினால் சூழல் பாதிப்பினை எதிர்கொள்கின்றன.

வடிவேல் வசந்தலா
கலை, கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT