Monday, July 22, 2024
Home » பங்களாதேஷ் வீரருக்கு அபராதம்

பங்களாதேஷ் வீரருக்கு அபராதம்

by sachintha
June 20, 2024 7:04 am 0 comment

நேபாள வீரருடன் மோதலில் ஈடுபட்ட பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசனுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேபாள அணிக்கு எதிரான ஆரம்பச் சுற்றுப் போட்டியின் நேபாள அணி பதிலெடுத்தாடிய நிலையில் மூன்றாவது ஓவரை வீசிய தன்சிம் நேபாள அணித்தலைவர் ரோஹித் பவுடலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன்போது நடுவர் தலையிட்டு இருவரையும் பிரித்து விட்டார். எனினும் போட்டிக்குப் பின்னர் இது தொடர்பில் கேட்டபோது பவுடல் கூறியதாவது, ‘எம்மிடையே எதுவும் நடக்கவில்லை. அவர் வந்து பந்தை அடிக்கும்படி என்னிடம் கூறினார், பதிலுக்கு சென்று பந்தைப் போடும்படி நான் கூறினேன். வேறு ஒன்றும் நடக்கவில்லை’ என்றார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தன்சிம் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்நிலையில் அவர் ஐ.சி.சி. நடத்தை விதி 2.12 பிரிவை மீறியதாக ஐ.சி.சி. குறிப்பிட்டுள்ளது. இந்த விதி முறையற்ற வகையிலான உடல் தொடர்பு சம்பந்தமானதாகும்.

தவறை ஒப்புக்கொண்ட தன்சிம், ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தரின் அபராதத்தையும் ஏற்றுக்கொண்டார். இதனால் இது தொடர்பில் உத்தியோகபூர்வ விசாரணை நடத்த தேவை ஏற்படவில்லை.

தவிர, கடந்த 24 மாதங்களில் இவருடைய முதல் குற்றமாக இது பதிவாகியதால் அவருக்கு ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT