Sunday, July 14, 2024
Home » புனித ஹஜ் யாத்திரை வெற்றிகரமாக நிறைவு

புனித ஹஜ் யாத்திரை வெற்றிகரமாக நிறைவு

by sachintha
June 20, 2024 12:26 pm 0 comment

சுமார் 2 மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் சகல வசதிகளுடன் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான வசதிகளை சவுதி அரேபியா ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறது. இம்முறை அதிகளவு வெப்பநிலையிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்காத வகையில் ஹஜ் கடமை நிறைவுற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் இப்பணியில் சவுதி அரேபியா இனைத்துக் கொண்டது.

பல மாதங்களாக பல செயலமர்வுகள், மாதிரிக் கண்காட்சிகள் போன்றவற்றை ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சு நடத்தியது. பாதுகாப்புப் படைகளுக்கு ஹாஜிகளுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி சவுதி அரேபிய அரசாங்கம் வழிகாட்டியது.

ஹாஜிகளுக்கு உச்சகட்ட வசதிகள் வழங்கப்பட்டதை கலந்துகொண்ட பலரும் சவுதி அரேபிய உத்தியோகபூர்வ ஊடகங்களுக்கு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆகியோருக்கும் தமது உணர்வுபூர்வமான நன்றிகளைத் தெரிவித்தனர்.

சுமார் 3 இலட்சத்து 90ஆயிரம் ஹாஜிகள் சுகாதார வசதிகளைப் பெற்றதாகவும் 28 திறந்த இதய அறுவைச் சிகிச்சைகள், 720 இதய வடிகுழாய்கள் மற்றும் 1,169 டயாலிசிஸ்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சவுதி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு 1445 ஹஜ் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இம்முறை ஹஜ் கடமை திருப்திகரமான முறையில் நிறைவுற்றது பற்றி கருத்துக்களை வெளியிட்டதுடன் மன்னரின் வழிகாட்டல்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளன. இலங்கையிலிருந்தும் சென்ற ஹாஜிகள் அவர்களுடைய கடமைகளை பூரணமாக சகல வசதிகளுடனும் நிறைவேற்றியுள்ளனர். ஹாஜிகளுக்கு பணி செய்வது தமக்கு சிறப்பு எனவும் அவர்கள் அல்லாஹ்வின் விருந்தாளிகள் எனவும் சுலோகங்கள் நகரெங்கும் காணப்படுகின்றன.

ஹாஜிகளின் ஆரோக்கியம் கருதி உணவகங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோய் காரணமாக தமது கடமைகளை செய்ய முடியாதவர்களை விமானங்கள் மற்றும் அம்புலன்ஸ் மூலம் அரபாவில் இருக்கும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சுமார் 2 மில்லியன் மக்களை சகல வசதிகளுடன் சுமார் 3 வாரங்கள் அல்லது ஒரு மாதம் மற்றும் சிலர் இரண்டு மாதங்கள் பராமரிப்பு செய்வதென்பது இலகுவான காரியமல்ல. பல நாட்டுத் தலைவர்கள், பல நாட்டுப் பிரதமர்கள், பிரமுகர்கள் அரச அதிகாரிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் உச்ச பாதுகாப்பு வழங்கி அவர்களை வரவேற்று சேவைகளை வழங்குவதில் சவுதி அரேபியாவின் சேவைகள் யாராலும் மறுக்க முடியாதவை.

250 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள், 40 ஆயிரம் தொண்டர்கள் மற்றும் ஓட்டுநர்கள், 29 ஆயிரம் சுகாதாரப் பயிற்சியாளர்கள், 53 ஆயிரம் பொறியாளர்கள், ஊழியர்கள், 2,500 துணை மருத்துவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 264 அம்புலன்ஸ் மையங்கள், 189 மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், 203 நடமாடும் குழுக்கள், 35 ஆயிரம் பேருந்துகளும் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மௌலவி பௌஸுல் அலவி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT