Saturday, July 20, 2024
Home » நயினாதீவு அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

நயினாதீவு அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

by Prashahini
June 20, 2024 3:06 pm 0 comment

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (20) காலை இடம்பெற்றது.

கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.

நாளை (21) தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை ,கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இம்முறையும் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையில் விசேட பஸ் சேவைகளும் , குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் விசேட படகு சேவைகள் இடம்பெற்றன.

அத்துடன் அமுதசுரபி அன்னதான மடத்தில் பக்கதர்களுக்கு அன்னதானம் இடம்பெற்றதுடன், ஆலய சூழல்களில் பக்தர்களின் நலன் கருதி சாரணர்கள் , சென் ஜோன் அம்புலன்ஸ் , சென்சிலுவை சங்கம் மக்கள் நலன்புரி சங்கம் உள்ளிட்டவற்றின் தொண்டர்களும் சேவைகளில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT