Monday, July 22, 2024
Home » தற்போதைய ஆட்சியாளர்கள் வங்குரோத்து நிலையிலிருந்தும் சரியாகப் பாடம் கற்றுக்கொள்ளவில்லை

தற்போதைய ஆட்சியாளர்கள் வங்குரோத்து நிலையிலிருந்தும் சரியாகப் பாடம் கற்றுக்கொள்ளவில்லை

by Prashahini
June 20, 2024 9:17 am 0 comment

பாராளுமன்ற அமர்வில் நேற்று (19) ஜனாதிபதியின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூ.8750 மில்லியன் குறைநிறைப்பு பிரேரணையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை அரசியல் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கி ஒப்பந்தம் கொடுக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல், திறன் வகுப்பறைகளை அமைத்துக் கொடுக்க இந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம் என்று கல்வி அமைச்சரிடம் யோசனை தெரிவிக்கப்பட்டது.

நிறைவேற்றுநரின் ஒப்புதலின்படி வங்குரோத்தான நாட்டில் 875 கோடிகள் இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசியல் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கும் தொகையை கல்விக்கு ஒதுக்கினால் எமது நாட்டின் கல்வி மேலும் மேம்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் வங்குரோத்து நிலையிலிருந்தும் சரியாகப் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தங்களது சொந்த அரசியலை முன்னெடுக்க இந்த வங்குரோத்து நாட்டில் 850 கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளனர். இது பரிதாபகரமான விடயமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 246 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, ஹோமாகம ஜனாதிபதி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT