Thursday, July 18, 2024
Home » வவுனியாவில் நிலநடுக்கம் 2.3 ரிச்டர் அளவில் பதிவு

வவுனியாவில் நிலநடுக்கம் 2.3 ரிச்டர் அளவில் பதிவு

-ஜன்னல்கள், கதவுகள் அதிர்ந்ததாக தெரிவிப்பு

by sachintha
June 20, 2024 6:00 am 0 comment

வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று முன்தினம் (18) இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிச்சரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அந்த அதிர்வினால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தங்களது வீடுகளில் ஐன்னல்கள், கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை தாம், உணர்ந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் கருத வேண்டியுள்ளதாக சர்வதேச நில அதிர்வுகளை ஆராய்ந்து பதிவிடும் மையமான Volcana Discovery தெரிவிக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT