Saturday, July 20, 2024
Home » தாய்லாந்தில் ஒருபால் திருமணத்திற்கு ஒப்புதல்

தாய்லாந்தில் ஒருபால் திருமணத்திற்கு ஒப்புதல்

by mahesh
June 19, 2024 3:16 pm 0 comment

தென் கிழக்கு ஆசியாவில் முதல் நாடாக தாய்லாந்தில் ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மேலவையான செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒருபால் திருமணத்தை சட்டமாக்குவதற்கு 130 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக நான்கு வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த சட்டம் தற்போது மன்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் மூன்றாவது ஆசிய நாடாகவே தாய்லாந்து பதிவாகவுள்ளது. இதற்கு முன் தாய்வான் மற்றும் நேபாளத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT