Saturday, July 13, 2024
Home » எஸ்தோனி வீரர் ரி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம்

எஸ்தோனி வீரர் ரி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம்

by mahesh
June 19, 2024 1:08 pm 0 comment

எஸ்தோனிய அணியின் துடுப்பாட்ட வீரர் சஹில் சவ்ஹான், சைப்ரஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் சதம் விளாசி ரி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சைப்ரஸின் ஹப்பி வில்லி மைதானத்தில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற போட்டியில் 192 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய எஸ்தோனிய அணி சார்பில் 2 ஆவது வரிசையில் வந்த சவ்ஹான் மொத்தமாக 41 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 18 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 144 ஓட்டங்களை விளாசி தனது அணியின் வெற்றியையும் உறுதி செய்தார்.

முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்னர் நேபாளத்திற்கு எதிராக நமீபிய அணியின் ஜான் நிகோல் லொப்டி ஈடன் 33 பந்துகளில் பெற்ற சதமே ரி20 சர்வதேச போட்டிகளில் பெறப்பட்ட அதிவேக சதமாக இருந்தது.

அதேபோன்று ரி20 கிரிக்கெட்டில் பெறப்பட்ட அதிவேக சதம் என்ற சாதனையையும் சவ்ஹான் படைத்தார். முன்னர் இந்திய பிரீமியர் லீக் தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக கிறிஸ் கெயில் 30 பந்துகளில் பெற்ற சதமே வேகமான இருந்தது.

அதேபோன்று சவ்ஹான் பெற்ற 18 சிக்ஸர்களும் ஆடவர் ரி20 இன்னிங்ஸ் ஒன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிக சிக்ஸர்களாகவும் சாதனை படைத்தது. முன்னதான ஆப்கான் வீரர் ஹஸ்ரதுல்ல சசாய் அயர்லாந்துக்கு எதிராக 2019 இல் நடந்த போட்டியில் 16 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக இருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT