Sunday, July 14, 2024
Home » அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் பொது நூலகம், திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது

அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் பொது நூலகம், திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது

by mahesh
June 19, 2024 1:10 pm 0 comment

அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பொது நூலகம் மற்றும் திறன் வகுப்பறை கட்டடம் நேற்று முன்தினம் (17) திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகத்தின் குடும்பத்தினரால், அவர் படித்த பாடசாலையின் அபிவிருத்திக்காக இந்த கட்டடம் அவரின் நினைவாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தை ஸ்ரீலங்கா வித்தியாசாலையின் அதிபர் நவரத்தினராஜா ஜெயரூபன் தலைமையில், கணிதப் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, கட்டடத்தை திறந்து வைத்ததுடன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரின் உருவச்சிலையினையும் திறந்து வைத்தார்.

பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசை வாத்தியங்கள் முழங்க, விருந்தினர்கள் பாடசாலை வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர், சம்பிரதாயபூர்வமாக அன்னாரின் உருவச்சிலையும், கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அபிவிருத்திக்கான முதற்படியாக, நூலகத்திற்கான நூல்கள், யாழ். மாநகர சபை மற்றும் இந்திய துணைத்தூதரகம் உட்பட தனியார் மற்றும் பலர் நூல்களை அன்பளிப்புச் செய்தனர். இந்நிகழ்வில், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன், கட்டடங்கள் திணைக்கள பிரதம பொருளியலாளர் வன்னியகுலம் அரவிந்தன், வவுனியா தெற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் தட்ஷாயினி வஜிகரன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உட்பட நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT