Saturday, July 13, 2024
Home » மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உளவியல் செயலமர்வு

மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உளவியல் செயலமர்வு

யாழ். மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு

by mahesh
June 19, 2024 1:00 pm 0 comment

சர்வதேச மாணவர் உளவியல் செயலமர்வு கடந்த வெள்ளிக்கிழமை (14) புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆசிய பசுபிக் பாடசாலைகள் உளவியல் அமைப்பில் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்த பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை நெறிப்படுத்தினர்.

யாழ் மாவட்ட பாடசாலைகளில் இருந்து பலநூறு மாணவர்கள் கலந்துகொண்டு பலன் பெற்றதோடு, இந்த நிகழ்வில் பாடசாலைகளில் உள ஆற்றுப்படுத்தலுக்குப் பொறுப்பான ஆசிரியர்களும் கருத்துரை வழங்கினர்.

பாடசாலையில் புத்தகக் கல்வி சுமையாக இருக்கும் உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு தம் வாழ்வை சரியான வழியில் நெறிப்படுத்தவும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இச் செயலமர்வின் ஊடாக, மாணவர்கள் வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டனர்.

இச் செயலமர்வில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட குரு முதல்வர் உட்பட ஏனைய கல்வி உளவியல் சார் ஆசிரியர்களும், மதகுருமார்களும் கலந்து சிறப்பித்தனர்.

(கோப்பாய் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT