Friday, July 26, 2024
Home » நோர்வூட் நியூவெளி தோட்ட மக்களுக்கான வீடமைப்புக் காணியை கைப்பற்ற முயற்சி

நோர்வூட் நியூவெளி தோட்ட மக்களுக்கான வீடமைப்புக் காணியை கைப்பற்ற முயற்சி

தடுத்து நிறுத்த அமைச்சர் ஜீவன் நடவடிக்ைக

by mahesh
June 19, 2024 12:50 pm 0 comment

நோர்வூட் நியூவெளி தோட்ட மக்களுக்கு வீடுகட்ட ஒதுக்கிய நிலத்தை முறைகேடாக கைப்பற்ற முயன்ற அரச அதிகாரிக்கு எதிராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நோர்வூட் நியூவெளி தோட்ட தொழிற்சாலை பிரிவில் கடந்த 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பத்து குடும்பத்தினர் தங்களது வீடுகளை இழந்து தற்காலிக இடத்தில் வசித்து வந்தநிலையில் இவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதியினை கொண்டு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இவ் வீடுகளை அமைத்து கொடுக்க ஒதுக்கப்பட்ட காணியை இப் பிரதேசத்தை சார்ந்த அரச அதிகாரி ஒருவர் முறைகேடாக ஆக்கிரமித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு தோட்ட மக்கள் கொண்டு வந்திருந்தனர். நோர்வூட் நியூவெளி தோட்ட தொழிற்சாலை பிரிவிற்கு (18) காலை திடீர் விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சருக்கு, தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தான் பணி புரியும் ஸ்தாபனத்தின் பெயரை பயன்படுத்தி, வீட்டு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள மக்களை மிரட்டி இடத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் அந்த அரச அதிகாரி ஈடுப்பட்டுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.

இந்த காணியானது காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணி என்பதை உறுதி செய்ததோடு இக்காணியை தோட்ட நிர்வாகம் முறையாக பெற்றுக்கொண்டுள்ளது என்பதையும் உறுதிசெய்து வீடுகளை நிர்மாணிக்கும் பணியை உடன் ஆரம்பிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உத்தரவிட்டார். இவ் விஜயத்தில் அமைச்சருடன் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் திரு சக்திவேல், காணி சீர்திருத்த ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சரின் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.

ஆ.ரமேஸ்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT