Monday, July 22, 2024
Home » நம்பிக்கை தரும் வகையில் பொருளாதார முன்னேற்றம்

நம்பிக்கை தரும் வகையில் பொருளாதார முன்னேற்றம்

by mahesh
June 19, 2024 6:00 am 0 comment

ட்டில் பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இந்த தரவு நாட்டில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படக் கூடியனவாக அமைந்துள்ளது. அதாவது இவ்வருடத்தின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 5.3 சதவீத வளரச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, அரசாங்கம் முன்னெடுத்துவரும் சிறந்த வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டின் கைத்தொழில் துறையில் 11.8 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான நிலைமை ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. இந்த வளர்ச்சி தொடர்ந்தும் இடம்பெற ​வேண்டும் என்பதுதான் நாட்டை உண்மையாக நேசிக்கும் குடிமக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.

ஏனென்றால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த தவறான பொருளாதார வேலைத்திட்டங்களின் விளைவாக 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதன் விளைவாக நாடும் மக்களும் அண்மைக் காலத்தில் முகம்கொடுத்திருக்காத நெருக்கடிகளையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டனர். அந்த நெருக்கடியின் சவாலகளை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் உள்ளாகினர். அதனால் அவ்வாட்சியாளர்கள் பதவிகளை விட்டு வெளியேறினர்.

அந்தச் சூழலில் நாட்டின் தலைமையை ஏற்று நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்பவோ, மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவோ எவரும் முன்வராத சூழல் ஏற்பட்டிருந்தது.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்று பொருளாதார ரீதியில் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை பரந்த அடிப்படையில் ஆரம்பித்தார். அந்த வேலைத்திடடங்கள் குறுகிய காலப்பகுதியில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிக்கத் தொடங்கின.

ஆனால் 2022 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இந்நநாடு 12 சதவீதத்திற்கும் குறைந்த எதிர்மறைப் பொருளாதார நாடாக இருந்தது. ஆன போதிலும் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்தும் பயனளிக்கத் தொடங்கின. அதனால் பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் நாட்டில் நிலவிய அளெகரியங்களும் நெருக்கடிகளும் கட்டம் கட்டமாக நீங்கலாயின.

இவ்வாறான சூழலில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் தெளிவான அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது. இதன் ஊடாக சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பையையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறு நம்பிக்கை தரும் வகையில் பொருளாதாரம் தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சி நாட்டில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

இதேவேளை, இந்நாட்டின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 2.2 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று உலக வங்கி கணிப்பிட்டுள்ளது. ஆனால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மறை 7 சதவீதத்திற்கும் மேற்பட்டதாக வீழ்ச்சியடைந்திருந்த இந்நாட்டு பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களில் 2 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளர்ச்சியை எட்டியிருப்பது சிறந்த சாதனை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனைத்து தரவுகளும் கணிப்பீடுகளும் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதைத் தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே பொருளாதார மேம்பாட்டுக்கான தற்போதைய வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காக கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பு என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT