Saturday, July 13, 2024
Home » T20 WC: புதிய பிட்ச்; இருந்தும் இத்தனை சாதனைகளா?

T20 WC: புதிய பிட்ச்; இருந்தும் இத்தனை சாதனைகளா?

- T20 உலகக் கிண்ணப் போட்டிகள் சுருக்கமான ஓர் பார்வை

by Prashahini
June 19, 2024 11:56 am 0 comment

T20 போட்டிகளைப் பொறுத்தவரை முடிவை கடைசி பந்துவரை யாரும் கணிக்க முடியாது. எந்த நேரத்திலும், எந்தப் பந்திலும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படும். ரசிகர்களுக்கு பவுண்டரி, சிக்ஸர்களை வாணவேடிக்கை நிகழ்த்தும் ஆட்டமாகத்தான் இதுவரை T20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆனால், 2024-ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் சற்றே வித்தியாசமானது.

பெரும்பாலும் ICC நடத்தும் T20 உலகக் கிண்ணம் இரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில், துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

ஆனால், இந்த முறை அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவில் நியூயார்க், ப்ளோரிடா மைதானங்கள், உலகக் கிண்ணம் தொடங்க சில நாட்களுக்கு முன்புதான் வடிவமைக்கப்பட்டன. அதனால் இந்த விக்கெட்டில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் அணிகள் அதிகபட்சமாக 150 ஓட்டங்களை கூட தாண்டவில்லை.

இப்போது சூப்பர்-8 சுற்றுகள் தொடங்க உள்ளன. இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஸ்வரஸ்யத்தை அதிகப்படுத்தும் வகையில் அணிகள் அதிக ஸ்கோர் செய்யக்கூடிய மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள நாடுகளில் இருக்கும் பேட்டிங்கிற்கு சாதகமான விக்கெட்டுகளில் நடத்தப்பட உள்ளன.

இதுவரை லீக் சுற்றுகள்வரை நடந்து முடிந்துவிட்டநிலையில் T20 உலகக் கிண்ணத் தொடரில் பல்வேறு அணிகளின் வீரர்களும், பல சாதனைகளைப் படைத்துள்ளன. அது குறித்த சுருக்கமான பார்வை.

2024 T20 Cricket World Cup: Schedule, matches, tickets, where to watch

  •                        அதிகமாக ஸ்கோர் செய்த அணிகள்
    2024-ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்தொடரில் மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்பட்ட லீக் ஆட்டங்களில் மட்டுமே 200 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கிங்ஸ்டவுனில் கடந்த 17ஆம் திகதி நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் சேர்த்த 5 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் அதிகபட்ச ஸ்கோராகும்.

 

  • இரண்டாவதாக, கடந்த 8ஆம் திகதி பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் சேர்த்ததும், மூன்றாவதாக கடந்த 16ஆம் திகதி கிராஸ்ஐசெட்டில் நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 201 ஓட்டங்கள் குவித்தது அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

    அதிகபட்ச ஓட்டங்களில் வெற்றி

  • பிராவிடன்ஸ் நகரில் கடந்த 8ஆம் திகதி நடந்த உகாண்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
  • பிராவிடன்ஸ் நகரில் கடந்த 3ஆம் திகதி உகாண்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 125 ஓட்டங்களில் வென்றது இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் வெற்றி.
  • கிராஸ்ஐலெட்டில் கடந்த 17ஆம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வென்றது மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் வெற்றியாகும்.

     துடுப்பாட்ட சாதனைகள்
       அதிகபட்ச ஓட்டங்கள்

  • ரஹ்மத்துல்லா குர்பாஸ் – ஆப்கானிஸ்தான் – 4 இன்னிங்ஸ், 167 ஓட்டங்கள், அதிகபட்சம் 80
  • நிகோலஸ் பூரன் – மேற்கிந்தியத் தீவுகள் – 4 இன்னிங்ஸ், 164 ஓட்டங்கள், அதிகபட்சம் 98
  • மார்கஸ் ஸ்டாய்னிஸ் – அவுஸ்திரேலியா – 4 இன்னிங்ஸ், 156 ஓட்டங்கள், அதிகபட்சம் 67
  • இப்ராஹிம் ஜாத்ரன் – ஆப்கானிஸ்தான் – 4 இன்னிங்ஸ், 152 ஓட்டங்கள், அதிகபட்சம் 70
  • டிராவிஸ் ஹெட் – அவுஸ்திரேலியா – 4 இன்னிங்ஸ், 148 ஓட்டங்கள், அதிகபட்சம் 68

                          அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள்

  • நிகோலஸ் பூரன் – மேற்கிந்தியத் தீவுகள் – ஆப்கனுக்கு எதிராக 53 பந்துகளில் 98 ஓட்டங்கள், 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்
  • ஆரோன் ஜோன்ஸ் – அமெரிக்கா – கனடாவுக்கு எதிராக 40 பந்துகளில் 94 ஓட்டங்கள், 10 சிக்ஸர்கள், 4 பவுண்டரி
  • ரஹ்மத்துல்லா குர்பாஸ் – ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்துக்கு எதிராக 56 பந்துகளில் 80 ஓட்டங்கள், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்
  • ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஆப்கானிஸ்தான் – உகாண்டாவுக்கு எதிராக 45 பந்துகளில் 76 ஓட்டங்கள், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்
  • ஷெர்பானே ரூதர்போர்ட் – மேற்கிந்தியத் தீவுகள் – நியூசிலாந்துக்கு எதிராக 39 பந்துகளில் 68 ஓட்டங்கள், 6சிக்ஸர்கள், 2பவுண்டரிகள்

                    அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்

  • நசீம் ஷா – பாகிஸ்தான் – 3 போட்டி, 10 ஓட்டங்கள், 250 ஸ்ட்ரைக் ரேட்
  • ஹசரங்கா – இலங்கை – 3 போட்டி, 20 ஓட்டங்கள், 222 ஸ்ட்ரைக் ரேட்
  • மொயின் அலி – இங்கிலாந்து – 4 போட்டி, 2 இன்னிங்ஸ், 41 ஓட்டங்கள், 195 ஸ்ட்ரைக் ரேட்
  • ஸ்டாய்னிஷ் – அவுஸ்திரேலியா – 4 போட்டி, 3 இன்னிங்ஸ், 156 ஓட்டங்கள், 190 ஸ்ட்ரைக் ரேட்
  • ஹேரி ப்ரூக் – இங்கிலாந்து -2 போட்டி, 67 ஓட்டங்கள், 186 ஸ்ட்ரைக் ரேட்

                              அதிகபட்ச அரைசதங்கள்

  • ஸ்டாய்னிஷ் – அவுஸ்திரேலியா – 2 அரைசதங்கள், 156 ஓட்டங்கள், அதிகபட்சம் 67, சராசரி 78
  • மெக்முலன் ஸ்காட்லாந்து – 2 அரைசதங்கள், 140 ஓட்டங்கள், அதிகபட்சம் 61, சராசரி 70
  • குர்பாஸ் – ஆப்கானிஸ்தான் – 2 அரைசதங்கள், 167 ஓட்டங்கள், அதிகபட்சம் 80, சராசரி 41

      அதிகபட்ச சிக்ஸர்கள்

  • ஆரோன் ஜோன்ஸ் -அமெரிக்கா – 3 போட்டிகள், 141 ஓட்டங்கள், 13 சிக்ஸர்கள்
  • நிகோலஸ் பூரன் – மேற்கிந்தியத் தீவுகள் – 4 போட்டிகள், 164 ஓட்டங்கள், 13 சிக்ஸர்கள்
  • ஸ்டாய்னிஷ் – அவுஸ்திரேலியா – 3 இன்னிங்ஸ் 156 ஓட்டங்கள், 10 சிக்ஸர்கள்

  அதிகபட்ச விக்கெட்டுகள்

  • பரூக்கி ஆப்கானிஸ்தான் – 4 போட்டி, 12 விக்கெட்டுகள், 5.58 எக்னாமி
  • டிரென்ட் போல்ட் – நியூசிலாந்து – 4 போட்டி, 9 விக்கெட்டுகள், 3.68 எக்னாமி
  • ஹூசைன் – மேற்கிந்தியத் தீவுகள் – 4 போட்டி, 9 விக்கெட்டுகள், 4.13 எக்னாமி
  • நோர்க்கியா – தென் ஆபிரிக்கா – 4 போட்டி, 9 விக்கெட்டுகள், 4.37 எக்னாமி
  • தன்சிம் சகிப்- பங்களாதேஷ்- 4 போட்டி, 9 விக்கெட்டுகள், 4.80 எக்னாமி

                      சிறந்த பந்துவீச்சு

  • பரூக்கி – ஆப்கானிஸ்தான் – உகாண்டாவுக்கு எதிரா 4 ஓவர்கள் வீசி 9 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள்
  • ஹூசைன் – மேற்கிந்தியத் தீவுகள் – உகாண்டாவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள்
  • நோர்க்கியா – தென் ஆபிரிக்கா – இலங்கைக்கு எதிராக 4 ஓவர்களில் 7 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள்
  • அர்ஷ்தீப் சிங் – இந்தியா – அமெரிக்காவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 9 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள்
  • பார்ட்மேன் – தென் ஆபிரிக்கா – நெதர்லாந்துக்கு எதிராக 4 ஓவர்களில் 11 ஓட்டங்கள்கொடுத்து 4 விக்கெட்டுகள்

அதிகபட்ச டிஸ்மிசல்ஸ்

  • ரிஷப் பந்த் – இந்தியா – 3 போட்டிகள், 7 டிஸ்மிசல்கள்
  • கான்வே – நியூசிலாந்து – 4 போட்டிகள், 6 டிஸ்மிசல்கள்
  • லிட்டன் தாஸ் – பங்களாதேஷ்- – 4 போட்டிகள், 6 டிஸ்மிசல்கள்
  • பூரன் – மேற்கிந்தியத் தீவுகள் – 4 போட்டிகள், 5 டிஸ்மிசல்கள்
  • குர்பாஸ் – ஆஃப்கானிஸ்தான் – 4 போட்டிகள், 5 டிஸ்மிசல்கள்

அதிகபட்ச கேட்சுகள்

  • மார்க்ரம் – தென் ஆபிரிக்கா – 4 போட்டிகள், 6 கேட்சுகள்
  • மேக்ஸ்வெல் – அவுஸ்திரேலியா – 4 போட்டிகள், 6 கேட்சுகள்
  • வேன் பீக் – நெதர்லாந்து – 4 போட்டிகள், 5 கேட்சுகள்
  • ஸ்டார்க் – அவுஸ்திரேலியா – 4 போட்டிகள், 4 கேட்சுகள்

      அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

  • குர்பாஸ், ஜாத்ரன் – ஆப்கானிஸ்தான் – உகாண்டாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள்
  • கோஸ், ஜோன்ஸ் – அமெரிக்கா – கனடாவுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள்
  • குர்பாஸ், ஜாத்ரன் – ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள்
  • வார்னர், ஸ்டாய்னிஷ் – அவுஸ்திரேலியா – ஓமனுக்கு எதிராக 4வது விக்கெட்டுக்கு 102 ஓட்டங்கள்

                        சூப்பர்-8 சுற்று போட்டி திகதிகள், மோதும் அணிகள்
ஜூன் 19
தென் ஆபிரிக்கா – அமெரிக்கா (இடம்: நார்த்சவுண்ட், குரூப்-2)

ஜூன்-20
இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் (இடம்: கிராஸ் ஐலெட், குரூப்2, காலை 6 மணி)
இந்தியா – ஆப்கானிஸ்தான் (இடம்: பிரிட்ஜ்டவுன், குரூப்-1, இரவு 8மணி)

ஜுன்-21
ஆஸ்திரேலியா – பங்களாதேஷ் (இடம்: நார்த்சவுன்ட், குரூப் 1, காலை 6 மணி)
இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா (இடம்: பிரிட்ஜ்டவுன், குரூப்-2, இரவு 8 மணி)

ஜூன் -22
மேற்கிந்தியத் தீவுகள் – அமெரிக்கா (இடம்: பிரிட்ஜ்டவுன், குரூப்-2, காலை 6மணி)
இந்தியா – பங்களாதேஷ் (இடம்: நார்த்சவுண்ட், குரூப்-1, இரவு 8 மணி)

ஜூன்-23
ஆப்கானிஸ்தான் – அவுஸ்திரேலியா (இடம்: கிங்ஸ்டவுன், குரூப்-1 காலை 6 மணி)
இங்கிலாந்து – அமெரிக்கா (இடம்: பிரிட்ஜ்டவுன், குரூப்-2 இரவு 8 மணி)

ஜூன் -24
மேற்கிந்தியத் தீவுகள் – தென் ஆபிரிக்கா (இடம்: நார்த்சவுண்ட், குரூப்-2 காலை 6 மணி)
அவுஸ்திரேலியா – இந்தியா (இடம்: கிராஸ் ஐலெட், குரூப்-1, இரவு 8 மணி)

ஜூன்-25
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் (இடம்: கிங்ஸ்டவுன், குரூப்-1 காலை 6 மணி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT