Saturday, July 20, 2024
Home » மலாவி துணை அதிபரின் இறுதி ஊர்வலத்தில் விபத்து

மலாவி துணை அதிபரின் இறுதி ஊர்வலத்தில் விபத்து

நால்வர் பலி, 20ற்கும் மேற்பட்டோர் பலி

by Gayan Abeykoon
June 18, 2024 10:51 am 0 comment

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபராக பதவி வகித்து வந்த சோலாஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் சோலோஸ் சிலிமாவின் உடல் தலைநகரத்திற்கு கொண்டு வரப்பட்டு மரியாதை செய்யப்பட்டபின்னர் அவரது சொந்த கிராமமான சைப்க்கு தொடர் வாகனங்கள் சூழ கொண்டு செல்லப்பட்டது.

சோலோஸ் சிலிமாவின் இறுதி ஊர்வலத்தை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். அதில் பலர் வாகன தொடரணியை மறித்து சோலோஸ் உடலை பார்க்க வேண்டுமென போராட்டம் செய்ததும் நடந்துள்ளது.

சில இடங்களில் தொடரணி வாகனங்களுக்கு குறுக்கே சிலர் புகுந்ததால் வாகனம் மோதி பலர் படுகாயமடைந்தனர். இதில் நால்வர் உயிரிழந்த நிலையில் 20ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT