188
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இந்த வார இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ‘சுவர்’ என புகழப்படுபவருமான ராகுல் ட்ராவிட் உள்ளார்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் இருபது ஓவர் உலக கோப்பை தொடருடன், அவரது பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார்.
அதன்படி, பலகட்ட தேடுதலுக்கு பின்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை பயிற்சியாளராக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.