Saturday, July 20, 2024
Home » உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு மேஜர் ஜெனரல் மகேஷ் தெரிவு

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு மேஜர் ஜெனரல் மகேஷ் தெரிவு

by Gayan Abeykoon
June 18, 2024 4:38 pm 0 comment

சுவீடனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு  மேஜர் ஜெனரல் மகேஷ்  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தியகமவில் நடைபெற்ற அகில இலங்கை திறந்த தடகளப் போட்டியில், 55 வயதுக்குட்பட்ட பிரிவில் சுத்தியல் எறிதல் (hammerthrow)போட்டி,  பிலிப்பைன்ஸில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் கண்டியில் நடைபெற்ற போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியமையால் அவர்  சுவீடனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் பழைய மாணவர் மற்றும் தேசிய கரப்பந்து சம்மேளனத்தின் மூத்த துணைத்தலைவராக உள்ளார். இப்போட்டியில் இதுவரை 39.11 மீற்றர்களை பதிவு செய்துள்ள அவர், உலக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்காக சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT