Thursday, July 18, 2024
Home » மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

by Gayan Abeykoon
June 18, 2024 8:00 am 0 comment

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நேற்று (17) காலை 6:15 மணிக்கு நடைபெற்றது.

இம்முறை கடற்கரை திறந்தவெளியில் இமாம் ஜமாத்தாக நடைபெற்ற புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல். முபாறக் (மதனி) நடாத்தினார். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறாக இட வசதிகள் ஒதுக்கப்பட்டு தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீன் மண்ணில் அப்பாவி சிறுவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து இந்த ஹஜ்ஜூப்பெருநாள் தினத்தில் அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டும் என இங்கு குத்பா பிரசங்கத்தை நிகழ்த்திய மௌலவி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

பெரியநீலாவணை விசேட, மருதமுனை தினகரன் விசேட, பெரியநீலாவணை தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT