Saturday, July 13, 2024
Home » காட்டுப் பாதை திறப்பதில் நிரந்தர கொள்கை அவசியம்

காட்டுப் பாதை திறப்பதில் நிரந்தர கொள்கை அவசியம்

- காரைதீவில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் கோரிக்கை

by Prashahini
June 18, 2024 10:38 am 0 comment

பத்தாம் நாள் பதியேற வேண்டும்” என்ற முன்னோரின் வாக்குப்படி காட்டுப் பாதை திறப்பதில் நிரந்தர கொள்கை அவசியம் என நேற்று முன்தினம் (16) மாலை காரைதீவை வந்தடைந்த சந்நதி – கதிர்காம பாதயாத்திரீகர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கடந்த மாதம் 11 ஆம் திகதி புறப்பட்ட யாழ் கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்றுமுன்தினம் காரைதீவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தருணத்தில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பாதயாத்திரீகர்கள் கல்முனையில் இருந்து 36ஆவது நாளில் காரைதீவை வந்தடைந்த போது அங்கு காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.ஜெயசிறில், யாத்திரை ஆலோசகர் சமய ஆர்வலர் வி.ரி.சகாதேவராஜா, மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜீ, முருக பக்தர் தேவதாஸ் ஆகியோர் அவர்களை வரவேற்று அவர்களது பாதங்களை கழுவி நமஸ்காரம் செய்து வரவேற்றனர்.

பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி வந்த ஜெயாவேல்சாமி வேலுக்கும், அடியார்களுக்கும் தீப ஆராதனை செய்தார். யாத்திரை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா சிறப்புரையை நிகழ்த்தினார். முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ” காட்டுப் பாதை திறப்பு” தொடர்பாக உரையாற்றினார்.

முருக பக்தர் தேவதாஸ் குடும்பத்தினர் அடியார்களுக்கு நீராகாரம் வழங்கினார்.

தொடர்ந்து, பாதயாத்திரை அடியார்கள் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜையில் கலந்து கொண்டார்கள் .

காரைதீவு குறூப் நிருபர் சகா

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT