Thursday, July 25, 2024
Home » நற்செய்தியை நம்பிக்கையுடன் விதைப்போம்

நற்செய்தியை நம்பிக்கையுடன் விதைப்போம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்

by Gayan Abeykoon
June 18, 2024 10:00 am 0 comment

பெற்றோர், அருள்பணியாளர்கள, துறவிகள், ஆசிரியர்கள், மறைக்கல்வியாளர்கள்,  பயிற்றுநர்கள் என நாம் எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும் நற்செய்தியை நம்பிக்கையுடன் விதைக்க இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் என  திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று, வத்திக்கானின்புனித பேதுரு பெஸ்லிகா பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய  செப உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு விவசாயி எவ்வளவுதான் நன்றாகவும் ஏராளமாகவும் விதைகளை மண்ணில் விதைத்தாலும், அவர் எவ்வளவுதான் நன்றாக மண்ணைத் தயாரித்தாலும், செடிகள் அதில் உடனடியாக முளைக்காது, அதற்கு நேரம் எடுக்கும். ஆகவே, விதைகளை விதைத்த பிறகு, அவைகள் சரியான நேரத்தில் முளைத்து வளர்ந்து இறுதியில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு ஏராளமான விளைச்சளைப் பெற நாம் காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் (வச. 28-29) என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. அதேவேளை, விதைக்கப்பட்ட அந்த விதைகள் மண்ணுக்கடியில் பெரிய அளவில் வளர்ந்துகொண்டிருக்கும் ஓர் அதிசயம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

ஆனால், அது நம் கண்களுக்குத் தெரிவதில்லை, அதற்கு மிகுந்த பொறுமை தேவை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இதற்கிடையில், விதைகள் விதைக்கப்பட்ட மண்ணின் மேற்பரப்பில் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை என்றபோதிலும், அம்மண்ணைப் பராமரிப்பது தண்ணீர் ஊற்றுவது மற்றும் அவற்றை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதையும் கோடிட்டுக்காட்டினார்.

இயேசுவின் இறையாட்சியும் இதுபோன்றதுதான் என்ற திருத்தந்தை, அவர் தம்முடைய வார்த்தை மற்றும் அருளின் விதைகளை, நல்ல மற்றும் ஏராளமான விதைகளை நம்மில் விதைக்கிறார், பின்னர், எப்போதும் அவர் நம்முடன் தொடர்ந்து பயணித்து அவ்விதைகள் முளைத்தெழும்பி பயன்தரும் வரை மிகவும் பொறுமையுடன் காத்திருக்கிறார் என்றும் விளக்கினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT