Saturday, July 20, 2024
Home » கோப்பாயில் ஆய்வு நூல் வெளியீடு

கோப்பாயில் ஆய்வு நூல் வெளியீடு

by Gayan Abeykoon
June 18, 2024 4:34 pm 0 comment

அமரர் கலாநிதி கார்த்திகேசு திருப்பதி தனது கலாநிதி பட்டத்திற்காக ஆக்கிய மாணிக்கவாசகரும் பெரியாழ்வாரும் கையாண்ட இலக்கிய உத்திகள் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு  கோப்பாய் சரவணபவனந்த வித்தியாலயத்தில் ஐ. சிவலோகநாதன் தலைமையில் நடைபெற்றது

நூலை நூலாசிரியரின் சகோதரன் கா. ஞானபண்டிதன் வெளியிட்டு வைக்க பேராசிரியர் ம. இரகுநாதன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் கலந்து கொண்டார்.

நூலின் வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசனும் நயப்புரைகளை எழுத்தாளர் கோப்பாய் சிவம் மற்றும் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய அதிபர் அ. ஆனந்தராசா ஆகியோரும் ஏற்புரையை மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் தெ. ஹர்சனும் ஆற்றினர்.  ஆசிரியர்களான அ. பேரின்பநாயகம் செ. மோகநாதன் ஆகியோர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT