Saturday, July 13, 2024
Home » சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில் மூன்று பேர் கைது
இறக்குமதி செய்யப்பட்ட

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில் மூன்று பேர் கைது

by Gayan Abeykoon
June 18, 2024 9:31 am 0 comment

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு  இறக்குமதி செய்யப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா  பெறுமதியான 120,000  சிகரெட்டுகளுடன் மூன்று  சந்தேக நபர்கள்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சட்டவிரோத சிகரெட்டுகளுடன் மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 10 ஐ  சேர்ந்த 32 வயது முதல்   45 வயது வரையான இச்சந்தேக நபர்கள் கொழும்பு 10 இல் நேற்று முன்தினம் (16)  கைது செய்யப்பட்டுள்ளதாக,  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக கடலோர பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு  வகை சிகரெட் அடங்கிய பெட்டிகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்,    சட்டவிரோதமாக நாட்டுக்கு  கடத்திக் கொண்டு வரப்பட்ட இச்சிகரெட்டுகள்,  நாடு முழுவதும் விநியோகிக்க தயாராக வைக்கப்பட்டிருந்தமை தமது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறினர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT