Monday, July 22, 2024
Home » யாழ். கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டி!

யாழ். கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டி!

by Gayan Abeykoon
June 18, 2024 1:12 am 0 comment

யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு, கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.

அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கரையொதுங்கிய பெட்டியை திறந்து பார்த்த வேளை அதனுள் தொலைத்தொடர்பு சாதனம் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT