Saturday, July 13, 2024
Home » கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் நிதியியல் அறிவூட்டல் நிகழ்வு

கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் நிதியியல் அறிவூட்டல் நிகழ்வு

by Gayan Abeykoon
June 18, 2024 11:02 am 0 comment

அண்மையில் இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது பல முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய நிலையான தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மாரவில மற்றும் வென்னப்புவ பிரதேசங்களில் உள்ள சுமார் 100 நுண் மற்றும் சிறிய வர்த்தக உரிமையாளர்கள் பயனடைந்தனர்.

கொமர்ஷல் வங்கியின் ‘திரிசக்தி நிலையான தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி முயற்சிகளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கு மற்றும் பயிற்சிப் பட்டறையானது அவர்களின் தொழில்நுட்ப மற்றும் நிதியியல் அறிவாற்றலை மேம்படுத்துவதற்கு தேவையான அறிவினை வழங்கியதுடன் தமது வர்த்தக செயற்பாடுகளை வளர்ச்சி அடையச் செய்வதற்கான வர்த்தக பதிவு நடைமுறைகள், மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட தொடர்புடைய தலைப்புகள் தொடர்பான தகவல்களை வழங்கியது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்கள் இலங்கை மத்திய வங்கி, வென்னப்புவ பிரதேச செயலகத்தின் முக்கிய திணைக்களங்கள் மற்றும் கொமர்ஷல் வங்கிக்கு உரித்தான அபிவிருத்தி கடன் திணைக்களம் மற்றும் விவசாயம் மற்றும் நுண் நிதி பிரிவு (AMFU) மற்றும் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

நிதி மற்றும் தொழில்முயற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல், நிதிக்கான அணுகலை அதிகரித்தல், தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதிகாரம் அளித்தல் மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களித்தல் ஆகியவை இத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT