Saturday, July 20, 2024
Home » உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடிய NDB வங்கி

உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடிய NDB வங்கி

by Gayan Abeykoon
June 18, 2024 11:04 am 0 comment

NDB வங்கியானது, ‘வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின்’ (WNPS) இளைஞர் பிரிவுடன் இணைந்து, பிரிட்ஷ் ஸ்கூல் ஒப் கொழும்பிற்காக [British School of Colombo] சிறப்பாகத் தொகுக்கப்பட்ட நிகழ்வுடன், ‘உலக சுற்றுச்சூழல் தினம் 2024’யை  (WED24) கொண்டாடியது. உலக சுற்றுச் சூழல் தினத்தின் தொனிப்பொருளான ‘நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை’  ஆகி யவற்றறுடன் தொடர்புறும் வகையில்  பூமி யைக் கொண்டாடவும், பாதுகாக்கவும் மற்றும் மீட்டெடுக்கவும் தேவையான மாற்றங்களை  ஊக்குவிக்கும் வகையில் அமர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வின் நோக்கமானது மீள்காடாக்கம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நிலைபேண் மீள்காடாக்கத்தை ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் பாடசாலை  சமூகத்தை ஈடுபடுத்துவதும் ஆகும்.    இந் நிகழ்வின்  முதல் கட்டமானது ,  சுற்றுச்சூழல், உள்ளூர்  உயிரினங்கள்,   இலங்கையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் காடழிப்பு, மாசடைதல் உள்ளிட்ட தற்போதைய இயற்கை உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை தொடர்பாக மாணவர்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்திருந்தது. இந்த விழிப்புணர்வு அமர்வில்   மாணவர்கள் பெற்ற அறிவினைத் தக்கவைத்துக் கொள்ளும் முகமாக  இடைவினைச் செயல்பாடுகளும் நடத்தப்பட்டன. மரக்கன்றுகள் நடும் விழாவுடன் இந்நிகழ்வானது  நிறைவடைந்தது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT