Sunday, July 14, 2024
Home » இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் செரண்டிப் கோதுமை ஆலை

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் செரண்டிப் கோதுமை ஆலை

by Gayan Abeykoon
June 18, 2024 11:16 am 0 comment

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஆலைச் சுற்றுப்பயணத்தின் மூலம், செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனமானது, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு எவ்வாறு பங்களித்து வருகின்றது என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது.

துபாயைத் தலைமையகமாகக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முன்னணி பல்வகை குடும்ப வணிகங்களில் ஒன்றான நிறுவனத்தின் முழு உரிமையைக் கொண்ட உபநிறுவனமான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம்  Al Ghurair கொழும்பு துறைமுகத்தில் உள்ள தனது அதிநவீன ஆலையில் ஊடகவியலாளர்களுக்கான விசேட சுற்றுப் பயணமொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்தச் சுற்றுப் பயணத்தின் ஊடாக இலங்கையின் உணவுப் பாதுகாப்பு, கோதுமை தயாரிப்புத் தொழில்துறையில் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் நிலைபேறு தன்மையை மேம்படுத்துவதில் செரண்டிப் கோதுமை ஆலை நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு என்பன வெளிப்பட்டன.

நிலைபேறுதன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் செரண்டிப் கோதுமை மா நிறுவனத்தின் செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் நிலைபேறுதன்மைக்கு கணிசமான பங்களிப்பைச் செலுத்தும் நோக்கில், பாரிய தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு (SFML) செயற்பாடுகளை வழங்கி, எரிசக்தி நுகர்வு, மற்றும் பணியாளர் தேவையைக் குறைத்து, நிலப்பரப்புக் கழிவுகளை குறைக்கும் வகையில் இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பைப் பேணுவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில், வருடம் முழுவதும் தடைப்படாத விநியோகத்தை உறுதிசெய்வதற்காக செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் எப்பொழுதும் மூன்று மாதங்களுக்குத் தேவையான கோதுமை இருப்புத் தொகையைப் பேணி வருகின்றது. நிறுவனத்தினால் முகாமைத்துவம் செய்யப்படும்; ஐந்து களஞ்சியங்கள் மூலோபாய ரீதியில் நாடு முழுவதிலும் அமைந்திருப்பதுடன், இதன் ஊடாக செரண்டிப் கோதுமை ஆலை நிறுவனம் தனது உற்பத்தி, நாடு முழுவதிலும் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்கின்றது.

செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் ஷர்மா, உடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போது. “நிலைபேறான மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களுடன் கூடிய உணவுத் தீர்வுகள் மூலம் இலங்கை முழுவதிலுமுள்ளவர்களுக்கு ஊட்டமளிப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் கூட்டுப்பொறுப்பின் உயர் தரத்தை நிலைநாட்டி எமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நம்பிக்கையுள்ள பங்காளராக விளங்குவதுமே எமது நோக்கமாகும்” என்றார்.

செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தனது கோதுமை தயாரிப்புக்களுக்கு அப்பால் சமூகப் பொறுப்பு மிக்க முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. முதியோர் இல்லங்களில் உள்ள சிரேஷ்ட பிரஜைகள் எசல பெரஹரவைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்கும் ‘செரண்டிப் உத்தம தலதா’ நிகழ்ச்சித் திட்டம் இதில் ஒன்றாகும். இதனை விடவும், ஒதுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த சமூகத்தை வலுவூட்டும் ‘7 ஸ்டார் மனுசத்கார’ நிகழ்ச்சித் திட்டம் சமூக முன்னேற்றம் தொடர்பான செரண்டிப் கோதுமை மா ஆலையின் அர்ப்பணிப்புக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரம்மிக்க கோதுமை மாவை நுகர்வது எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. உயர் தரம் மற்றும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கும் ஊட்டச்சத்து மிக்க சிறந்த கோதுமை மா வழங்கப்படுவதும் உறுதிசெய்யப்படுகின்றது.

மத்திய கிழக்கில் உள்ள பாரிய பல்வகை குடும்ப வணிகக் குழுமங்களில் ஒன்றாக விளங்கும் Al Ghurair நிறுவனம், உணவு மற்றும் ஆராய்ச்சி, ஆதனங்கள், கட்டுமானம் மற்றும் சேவைகள், வலுசக்தி, இயக்கம் மற்றும் தொழில்முயற்சி ஆகிய ஆறு முக்கிய தொழில்துறைகளில் தனது வணிகத்தை வியாபித்துள்ளது. 1960ஆம் ஆண்டு வர்த்தக வணிகமாக ஆரம்பிக்கப்பட்ட Al Ghurair நிறுவனம், வளர்ச்சியுற்று வரும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில்துறை மற்றும் வணிகத்தின் முதலாவது தூண்களில் ஒன்றாகவும் விளங்கியது.

எளிமையான தொடக்கத்தில் ஆரம்பித்து, புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியின் பெருமையான வரலாற்றுடன், Al Ghurair குடும்பத்தின் பெயரானது மதிப்புமிக்க நாட்டின் பாரம்பரியம், பரிணாம வளர்ச்சி மற்றும் நோக்கம் என்பவற்றின் மறுபெயராகவும் பதிவாகியுள்ளது.

டியேராவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், உலகம் முழுவதிலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது பல்வகையான வணிகச் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதுடன், ஏறத்தாள 28,000க்கும் அதிகமான பணியாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். நிறுவனம் அதன் 60 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைத் தொடர்ந்தும் பேணி வருவதுடன், ‘வாழ்க்கையை மேம்படுத்தல்’ என்ற நோக்கத்தின் கீழ் தான் செயற்படும் சமூகங்கள் மத்தியில் அர்த்தமுள்ள மற்றும் நிலைபேறான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்துவருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT