Sunday, July 14, 2024
Home » பசுமைக் கடனை அறிமுகப்படுத்தியுள்ள அசட்லைன் பைனான்ஸ் லிமிடட்

பசுமைக் கடனை அறிமுகப்படுத்தியுள்ள அசட்லைன் பைனான்ஸ் லிமிடட்

by Gayan Abeykoon
June 18, 2024 11:45 am 0 comment

சூரிய சக்தியில் முதலீடு செய்ய விரும்பும் தனி நபர்கள், மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட நிதி உதவிகளை வழங்குவதற்காக அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனம் அசட்லைன் பசுமைக் கடனை அறிமுகப்படுத்தியுள்ளது. சூரிய சக்திப் பயன்பாட்டுக்கான அணுகல் மற்றும் அதற்காக செலவுசெய்யக் கூடிய தன்மையை ஊக்குவிக்கும் வகையை இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வலுசக்தி முறைகளுக்கு மாற்றீடாக மாறியுள்ள சூரிய சக்தி, நிலைபேறு தன்மை மிக்கதாகவும், செலவுச் சிக்கனம் நிறைந்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு அதன் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பலன்களைப் பயன்படுத்த உதவுவதில் அசட்லைன் பைனான்ஸ் உறுதியாக உள்ளது.

“நீங்கள் சூரிய சக்திக்கு மாறுவதற்கு எதிர்பார்த்திருக்கும் வீட்டின் உரிமையாளராக இருந்தாலும் சரி, செயற்பாட்டுக்கான செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கான பாதிப்பைக் குறைப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் வணிகமொன்றைக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி உங்களுக்கு அசட்லைன் பசுமைக் கடன், நிலையான நடைமுறைகளை எளிதில் ஏற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது” என அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு.அஷான் நிசங்க தெரிவித்தார்.

கடன் பெறுபவர்கள் தமக்கான சூரியப் படலங்களை மலிவாக, இலகுவான முறையில் நிறுவிக்கொள்வதற்கு ஏற்ற வகையில் போட்டித் தன்மையான வட்டியை அசட்லைன் பைனான்ஸ் வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் முகாமைத்துவம் செய்யக் கூடிய ஆரம்ப முதலீடொன்றை மேற்கொண்டு, பின்னர் மாதாந்த மின்சாரப் பட்டியலில் கிடைக்கும் சேமிப்பைப் பயன்படுத்தி மாதாந்தத் தவணையைச் செலுத்த முடியும். அத்துடன், மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் ஊடாக மேலதிக வருமானத்தைப் பெறுவதுடன், உங்கள் சொத்துக்கு அதிக பெறுமதியையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். இது சூரிய சக்தியில் முதலீடு செய்வதற்கான சிறந்த வணிகத் தீர்மானமாக இருக்கும். நாடு முழுவதிலும் உள்ள 56 கிளைகள் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து வழங்குவதுடன், கடன் விண்ணப்பம் மற்றும் சூரியப் படலங்களை நிறுவுவத போன்ற வசதிகளுக்குத் தனது முழுமையான ஆதரவை இதன்மூலம் உறுதிசெய்கின்றது. முதற்கட்டமாக, தெரிவுசெய்யப்பட்ட சூரியசக்தித் தீர்வு வழங்குனர்களிடமிருந்து மேற்கொள்ளப்படும் சூரியப்படல நிறுவல்களுக்கு இந்த நிதிவசதி வழங்கப்படுகின்றது.

அசட்லைன் பைனான்ஸ் நிறுவனத்தின் விரிந்த நிலைபேறான நிகழ்ச்சிநிரலானது, சுற்றுச்சூழல் மற்றும் பசுமைக் கடன் முன்முயற்சிகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், நிதி உள்ளடக்கம் மற்றும் பெண்களின் அதிகாரமளித்தல் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகின்றது.

அசட்லைன் பசுமைக் கடன் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இன்றே அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனத்துக்கு விஜயம் செய்யவும் அல்லது 0114700100 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எமது வாடிக்கையாளர் சேவை அணியினரைத் தொடர்புகொள்ளவும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT