Saturday, July 20, 2024
Home » T20 WC 2024: ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள்; நிக்கோலஸ் பூரன் சாதனை

T20 WC 2024: ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள்; நிக்கோலஸ் பூரன் சாதனை

by Prashahini
June 18, 2024 9:53 am 0 comment

ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாய் வீசிய ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் விளாசப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் யுவராஜ் சிங், பொல்லார்ட், திபேந்திர சிங் ஆகியோருக்கு பின் மே.தீவுகள் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் ஒரே ஓவரில் 36 ஓட்டங்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

2007ஆம் ஆண்டு நடந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி வீரர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸ் அடித்து வரலாற்று சாதனை படைத்தார். ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் விளாசப்பட்ட சம்பவம் T20 கிரிக்கெட்டுக்கே விளம்பரம் போல் மாறியது. இதன்பின் ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் சேர்க்கப்படும் சம்பவம் அரிதாக நிகழ்ந்து வந்தது.

ஒருமுறை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட் ஒரே ஓவரில் 36 ஓட்டங்களைவிளாசினார். அதேபோல் அண்மையில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இணைந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 36 ஓட்டங்களை சேர்த்தனர். நேபாளம் வீரர் திபேந்திர சிங் கத்தார் அணிக்கு எதிராக 36 ஓட்டங்களை விளாசினார். தற்போது T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மே.தீவுகள் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 36 ஓட்டங்களை விளாசி இருக்கிறார்..

T20 உலகக் கிண்ணத் தொடரின் கடைசி லீக் போட்டியில் மே.தீவுகள் – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 3 ஓவர்கள் முடிவில் 37 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தது. இதன்பின் பூரன் – சார்லஸ் கூட்டணி பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இந்த நிலையில் 4ஆவது ஓவரை வீச ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாய் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே நிக்கோலஸ் பூரன் அபார சிக்ஸ் அடிக்க, 2ஆவது பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. ஆனால் அது நடுவரால் நோ-பால் என்று அறிவிக்கப்பட, மீண்டும் வீசிய பந்து ஒய்டு மற்றும் பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஒரு பந்து வீசிய நிலையில் 16 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் மீண்டும் வீசப்பட்ட 2ஆவது பந்தில் ஓட்டம் எதுவும் சேர்க்கப்படவில்லை.

தொடர்ந்து 3ஆவது பந்தில் லெக்-பை பவுண்டரி செல்ல, 4ஆவது பந்தில் நிக்கோலஸ் பூரன் அபாரமாக ஒரு பவுண்டரியை விளாசினார். பின்னர் 5ஆவது பந்தில் கவ் கார்னர் திசையில் 89 மீட்டர் தூரத்திற்கு பூரன் ஒரு சிக்சரை அடிக்க, கடைசி பந்தில் மீண்டும் பந்து சிக்சருக்கு பறந்தது.

இதன் மூலமாக ஒரே ஓவரில் 36 ஓட்டங்களை விளாசி நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 36 ஓட்டங்களை விளாசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT