Saturday, July 20, 2024
Home » பொது வேட்பாளர் ஒருவரை அனைவரும் ஆதரிப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும்
ஜனாதிபதி தேர்தலில்

பொது வேட்பாளர் ஒருவரை அனைவரும் ஆதரிப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும்

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

by Gayan Abeykoon
June 18, 2024 10:00 am 0 comment

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து அனைவரும் ஒன்றிணைந்து அவரை ஆதரிப்பதே வெற்றிக்கான வாய்ப்பாக அமையுமென, இ. தொ. கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மட்டக்களப்பின் மண்முனைப்பற்று, தாழங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதியை மக்கள் பாவனைக்கு நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய   போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி உதவியுடன் தாழங்குடா கடற்கரை வீதி சுமார் 92 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொடர்ந்து   உரையாற்றிய போது,

“நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் இன்று எந்தக் கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் போது பலம் வாய்ந்த தலைவர் ஒருவரை தெரிவு செய்ய முடியும்.

ஜனாதிபதியாக வருவதற்கு தேர்தலில் 51சதவீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளை பெறும் நிலை இன்றைய நிலையில் எந்தக் கட்சிக்கும் கிடையாது.

கட்சிகளுக்கு  இடையில் கடுமையான போட்டியே நிகழும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு ஆதரவு வழங்கும் போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது”  எனத்  தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT