Sunday, July 14, 2024
Home » வருடத்தின் முதலாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.3% வளர்ச்சி

வருடத்தின் முதலாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.3% வளர்ச்சி

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

by Gayan Abeykoon
June 18, 2024 8:28 am 0 comment

ந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறந்த வேலைத்திட்டம் காரணமாக நாட்டில் கைத்தொழில் துறை 11.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய  இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,   அவர் கூறினார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக  அவர் மேலும் தெரிவித்த போது,

“2022ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் 12 சதவீதத்துக்கும் குறைந்த எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்ட நாடாக இலங்கை பதிவானது. இந்த நிலைமையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் இலங்கையின் பொருளாதார பயணத்தை நம்பிக்கையுடன் பார்க்க முடியும்.

உலக வங்கியின் கணிப்புக்கமைய  இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 2.2 சதவீத வளர்ச்சியை எட்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 7க்கு மேல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட இந்த நாட்டில் இரண்டு வருடங்களில் 2 சதவீதத்துக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை சிறந்த சாதனையாகும்” எனத் தெரிவித்தார்.  நாடு பின்பற்றும் வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தால்  தெளிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர்,  எவ்வாறாயினும் அவதானமாக முனனோக்கி செல்ல வேண்டுமென்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT